/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வீரவநல்லூரில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்புவீரவநல்லூரில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு
வீரவநல்லூரில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு
வீரவநல்லூரில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு
வீரவநல்லூரில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு
ADDED : ஆக 03, 2011 12:31 AM
வீரவநல்லூர் : வீரவநல்லூர் அருகே பெண்ணிடம் தாலிச்செயினை பறித்து கொண்டு தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வீரவநல்லூர் உப்புவாணியமுத்தூரை சேர்ந்த காசிராஜன் மனைவி பிரேமலதா(35). இவர் அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வேலைக்கு செல்ல உப்புவாணியமுத்தூர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் வீரவநல்லூர் செல்ல பிரேமலதாவிடம் வழி கேட்பதுபோல் பேச்சு கொடுத்துள்ளார். தொடர்ந்து பைக்கின் பின்னால் இருந்த நபர் அரிவாளை கழுத்தில் வைத்து மிரட்டி பிரேமலதா அணிந்திருந்த சுமார் 5 பவுன் தாலிசெயினை பறித்து கொண்டார். தொடர்ந்து கொள்ளையர்கள் இருவரும் பைக்கில் தப்பியாடினர். பறிபோன நகையின் 60 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சாம்சன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.