Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைவது எப்படி? வைரலான வங்கதேச யூடியூபர் வீடியோவால் சர்ச்சை

இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைவது எப்படி? வைரலான வங்கதேச யூடியூபர் வீடியோவால் சர்ச்சை

இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைவது எப்படி? வைரலான வங்கதேச யூடியூபர் வீடியோவால் சர்ச்சை

இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைவது எப்படி? வைரலான வங்கதேச யூடியூபர் வீடியோவால் சர்ச்சை

ADDED : ஜூலை 28, 2024 05:00 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

டாகா: வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவது குறித்து அந்நாட்டு யூடியூபர் ஒருவரின் பழைய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என இணையதளவாசிகள் கூறியுள்ளனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் இந்தியாவிற்குள் எப்படி அத்துமீறி, சட்டவிரோதமாக நுழைய முடியும் என்பதை விளக்கி வீடியோ ஒன்றை, தனது சேனலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய எல்லையில் உள்ள வங்கதேசத்தின் சுனம்கன்ஜ் மாவட்டத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது.

அதில், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய மக்களுக்கு எந்த ஆவணங்களும், விசாவும் அல்லது பாஸ்போர்ட்டும் தேவையில்லை. இந்தியாவிற்கு செல்லும் பாதையை காட்டி, இதன் வழியாக சென்றால் பிஎஸ்எப் வீரர்களிடம் மாட்டி கொண்டு பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் எனக்கூறுகிறார்.

மேலும், பிஎஸ்எப் முகாம்களை காட்டியதுடன் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைவதற்கான வழி என சில சுரங்கப்பாதைகளை எடுத்துக்காட்டி உள்ளார். இந்த வழியாக சென்று நாட்டின் நற்பெயரை கெடுக்க வேண்டாம் என வங்கதேசத்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த இணையதளவாதிகள், இதில் கவனம் செலுத்தி அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனக்கூறி வருகின்றனர்.

'எல்லைப் பாதுகாப்புப் படை தூங்குகிறதா? ஒரு யூடியூபருக்கு வழி தெரிந்தால், அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வளவு காலம் எல்லைப் பாதுகாப்புப் படை என்ன செய்து கொண்டிருக்கிறது?” என்று அபர்ஜிதா தேஷ்பாண்டே என்ற இணையதளவாசி கேள்விஎழுப்பி உள்ளார்.

பாஞ்சி என்பவர், ' சட்டவிரோதமாக வருபவர்களுக்கு விசாக்கள் அல்லது பாஸ்போர்ட் தேவையில்லை. அவர்கள் சுரங்கப் பாதையைக் கடந்தவுடன், பான் கார்டுகள் மற்றும் ஆதார் அட்டைகள் விற்கப்படுகின்றன. வாருங்கள் வந்து ஓட்டளிக்கும் கடமையை நிறைவேற்றுங்கள்'என்று கூறியுள்ளார்.

அமிர் ரஸா கான் என்பவர், வீடியோ வெளியிட்டது நல்லது; இப்போது நாம் பாதுகாப்பினை வலுப்படுத்த முடியும் எனக்கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us