/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சீவநல்லூரில் ரூ.10 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் பணி துவக்கம்சீவநல்லூரில் ரூ.10 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் பணி துவக்கம்
சீவநல்லூரில் ரூ.10 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் பணி துவக்கம்
சீவநல்லூரில் ரூ.10 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் பணி துவக்கம்
சீவநல்லூரில் ரூ.10 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் பணி துவக்கம்
தென்காசி : சீவநல்லூரில் 10 லட்சம் ரூபாய் செலவில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சியின் போது யூனியன் சேர்மன் சட்டநாதன் கூறும் போது, ''செங்கோட்டை யூனியனில் கடந்த 5 ஆண்டு காலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது சீவநல்லூர் திருவெற்றியூர் பிள்ளையார் கோவில் தெரு மற்றும் அம்மன் கோவில் தெருவில் சிமென்ட் தளம் அமைக்க 6 லட்சத்து 51 ஆயிரம் ரூபாயும், சீவநல்லூர் குறவர் சமுதாயத்தினர் பயன்படுத்தும் மயானத்திற்கு பாதை வசதி மற்றும் எரிமேடை அமைக்க 3 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயும், சீவநல்லூர் தெருவில் சிமென்ட் தளம் அமைக்க 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயும், தரை மட்ட பாலம் அமைக்க 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இலத்தூர் 1வது தெருவில் சிமென்ட் தளம் அமைக்க 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயும், புளியரை மான்முட்டி காலனிக்கு செல்லும் செட்டியார் தெருவில் சிமென்ட் தளம் அமைக்க 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், கற்குடி இந்திரா காலனி 1வது தெருவில் சிமென்ட் தளம் அமைக்க 1 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயும், மேல ரவியபத்து குளம் மடை சீரமைக்க 2 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தெற்குமேடு குரங்குநடை சாலை தாமரை குளத்து கரையில் மறுகால் பக்கம் தடுப்பு சுவர் கட்ட 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாயும், வாட்டர் டேங்க் 6வது தெருவில் சிமென்ட் தளம் அமைக்க 2 லட்சத்து 63 ஆயிரம் ரூபாயும், கிளாங்காடு புதுகிராமத்தில் சிமென்ட் தளம் அமைக்க 4 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயும், பாலமார்த்தாண்டபுரத்தில் மாணவர் விடுதிக்கு பின்புறம் வாறுகால் அமைத்து சிமென்ட் தளம் அமைக்க 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கான டெண்டர் விடப்பட்டு இதற்கான தீர்மானங்களும் யூனியன் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது'' என்றார் யூனியன் சேர்மன் சட்டநாதன்.