ஐ.நா.,வில் இடம்: பாலஸ்தீனத்துக்கு முதல் வெற்றி
ஐ.நா.,வில் இடம்: பாலஸ்தீனத்துக்கு முதல் வெற்றி
ஐ.நா.,வில் இடம்: பாலஸ்தீனத்துக்கு முதல் வெற்றி
ADDED : அக் 06, 2011 03:14 PM
பாரிஸ்: ஐ.நா., சபையில் உறுப்பு நாடாக இடம்பெற வேண்டும் என பாலஸ்தீனத்தின் முயற்சிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த ஐ.நா.,வின் யுனெஸ்கோ செயற்குழு கூட்டத்தில் பாலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு ஆதரவாக 40 நாடுகள் ஓட்டளித்தன. 4 நாடுகள் எதிராக ஓட்டளித்தன. 14 நாடுகள் ஓட்டெடுப்பை புறக்கணித்தன. இந்த முடிவுகள் இம்மாத இறுதியில் ஐ.நா., பொது சபையில் சமர்ப்பிக்கப்படும். இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், யுனெஸ்கோவின் முடிவு தங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், பாலஸ்தீன கோரிக்கை ஐ.நா., பொது சபையில் ஓட்டெடுப்புக்கு வரும் போது எதிர்த்து ஓட்டளிக்கும்படி பிற நாடுகளை கேட்டுக்கொண்டார்.


