ADDED : செப் 21, 2011 12:09 AM
மதுரை : மதுரை மாவட்டம் நாகனாகுளம் ஊராட்சிக்கு உட்பட்டபகுதியில் வெறிநாய் தொல்லை அதிகரித்து வருகிறது.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட நாகனாகுளம், மீனாட்சிநகர், ஐலன்ட்நகர், நாராயணபுரம் விரிவாக்க பகுதிகளில் ஏராளமான நாய்கள் தெருக்களில் திரிகின்றன. ரோட்டில் செல்வோரை அவைகள் விரட்டுகின்றன. மேலும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு கொள்வதால், குழந்தைகள் தெருக்களில் நடக்க அச்சப்படும் நிலையுள்ளது. நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.