Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கீழமாதாபுரத்தில் குறை தீர்க்கும் முகாம்

கீழமாதாபுரத்தில் குறை தீர்க்கும் முகாம்

கீழமாதாபுரத்தில் குறை தீர்க்கும் முகாம்

கீழமாதாபுரத்தில் குறை தீர்க்கும் முகாம்

ADDED : ஜூலை 14, 2011 01:04 AM


Google News

ஆழ்வார்குறிச்சி: கீழமாதாபுரத்தில் நேற்று முன்னாள் முப்படை வீரர்களுக்கான குறை தீர்க்கும் முகாம் நடந்தது.தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களை உள்ளடக்கிய முன்னாள் படைவீரர்களின் தலைமை அலுவலக வெட்ரன் ஹெல்ப் லைன் கமாண்டிங் ஆபீசர் கர்னல் ஆர்.சிவநாதன், லெப்டினன்ட் கர்னல் ரோஹித் மிஸ்ரா ஆகியோர் அறிவுரையின் பேரில் கீழமாதாபுரத்தில் முன்னாள் முப்படை வீரர்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.முகாமிற்கு நாயக் செல்வம் தலைமை வகித்தார்.

நாயக் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். நாயக் ஜெயசீலன் வரவேற்றார். முகாமில் முன்னாள் முப்படை வீரர்கள், விதவைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினை சார்ந்தவர்களுக்கு ஓய்வூதிய பிரச்னைகள், கூடுதல் பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கான மனுக்களை ஹெல்ப் லைன் சென்டர் அதிகாரி கேப்டன் டேவிட் பெற்றுக் கொண்டார். வங்கிகள் சார்பான குறைகளுக்கு உடனடியாக ஆன்லைனிலேயே பதில்கள் பெற்று உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது.



பெங்களூரை சேர்ந்த நாயக் செந்தில்குமார், நாயக் சாமுவேல், நாயக் சிவக்குமார் ஆகியோர் பிரச்னை மனுக்களுக்கு உயரதிகாரிகளிடம் இருந்து உடனடி பதிலை ஆன்லைன் மூலம் பெற்று தந்தார்கள். முன்னதாக முகாம் அலுவலகத்தை அதிகாரி கேப்டன் டேவிட் முன்னிலையில் நாயக் செல்வம் திறந்து வைத்தார். கிராமப்புறங்களில் வாழும் முப்படை முன்னாள் ராணுவ வீரர்களுக்காக முகாம் நடத்தப்பட்டது. நாயக் ஐசக் ஜார்ஜ் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை ஹெல்ப் லைன் சென்டர் அதிகாரி கேப்டன் டேவிட், ஹவில்தார் சக்திவேல், முன்னாள் ராணுவத்தினர் ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி செய்திருந்தனர். இன்று (14ம் தேதி) தென்காசியிலும், நாளை (15ம் தேதி) ஸ்ரீவில்லிபுத்தூரிலும், 16ம் தேதி நெல்லை மிலிட்டரி கேண்டீன் சென்டரிலும், ஆகஸ்ட் மாதம் சென்னையிலும், செப்டம்பர் மாதம் மதுரையிலும் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படுகிறது.முன்னாள் முப்படை வீரர்கள் இந்த குறைதீர்க்கும் முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென ஹெல்ப் லைன் சென்டர் அதிகாரி கேப்டன் டேவிட் கேட்டுக் கொண்டுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us