Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தியாகி விஸ்வநாததாஸிற்கு சிலை நெல்லை "டீம்' விழாவில் வலியுறுத்தல்

தியாகி விஸ்வநாததாஸிற்கு சிலை நெல்லை "டீம்' விழாவில் வலியுறுத்தல்

தியாகி விஸ்வநாததாஸிற்கு சிலை நெல்லை "டீம்' விழாவில் வலியுறுத்தல்

தியாகி விஸ்வநாததாஸிற்கு சிலை நெல்லை "டீம்' விழாவில் வலியுறுத்தல்

ADDED : செப் 19, 2011 11:55 PM


Google News

திருநெல்வேலி : சென்னையில் தியாகி விஸ்வநாததாஸிற்கு சிலை அமைக்க 'டீம்' அமைப்பு விழாவில் வலியுறுத்தப்பட்டது.

நெல்லையில் மருத்துவர் சமுதாய அமைப்பு 'டீம்' மூன்றாம் ஆண்டு விழா தலைவர் முத்துராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் செல்வ சூடாமணி வரவேற்றார். கவுரவ ஆலோசகர் டாக்டர் அய்யனார் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் வேலாயுதம் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் சங்கரநயினார் நிதிநிலை அறிக்கை வாசித்தார். எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் விழா மலரை வெளியிட்டு பேசும்போது, ''கல்வி வாழ்வில் உயர்வை தரும். அனைவரும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். சிவில் சர்வீஸ், அரசுத்தேர்வாணைய போட்டித்தேர்வுகளை மாணவர்கள் எழுதி உயர்பதவிகளுக்கு செல்ல வேண்டும்'' என்றார். ஓய்வு பெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் கமாண்டண்ட் ராமலிங்கம் மலரை பெற்றுக்கொண்டார்.



ஓய்வு பெற்ற நீதிபதி பூபாலன், பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் சண்முகம், மகாதேவன், மயிலைகுமார், பன்னீர்செல்வம், குமரி மாவட்ட மருத்துவர் சமுதாய முன்னேற்றச்சங்க ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட், செயலாளர் மோகன், பல்கலைக்கழக துணை நூலகர் பாலசுப்பிரமணியன், ஆசிரியை பாலசரஸ்வதி, டாக்டர் தமிழ்மணி, டாக்டர் திருஞானசம்பந்தன், மீனாட்சிசுந்தரம், முருகானந்தம் உட்பட பலர் பேசினர். சென்னையில் சுதந்திரப்போராட்ட தியாகி விஸ்வநாததாஸிற்கு அரசு சார்பில் சிலை அமைப்பது, எம்.பி.சி., பட்டியலில் மருத்துவர் சமுதாயத்திற்கு 5 சதவீத உள்ஒதுக்கீடு அளிப்பது, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் மருத்துவர் சமுதாயத்தை மத்திய அரசு சேர்ப்பது, சித்தா, நர்ஸிங் உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் மருத்துவ சமுதாயத்திற்கு முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us