/உள்ளூர் செய்திகள்/தேனி/முல்லைப்பெரியாறில் புதிய அணை கேரளா அரசு தனி ஆணையம் : தமிழக மக்கள் எதிர்ப்புமுல்லைப்பெரியாறில் புதிய அணை கேரளா அரசு தனி ஆணையம் : தமிழக மக்கள் எதிர்ப்பு
முல்லைப்பெரியாறில் புதிய அணை கேரளா அரசு தனி ஆணையம் : தமிழக மக்கள் எதிர்ப்பு
முல்லைப்பெரியாறில் புதிய அணை கேரளா அரசு தனி ஆணையம் : தமிழக மக்கள் எதிர்ப்பு
முல்லைப்பெரியாறில் புதிய அணை கேரளா அரசு தனி ஆணையம் : தமிழக மக்கள் எதிர்ப்பு
கூடலூர் : முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட கேரள பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி தனி ஆணையம் அமைப்பதற்கு, தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கே.எம்.அப்பாஸ் (ஐந்து மாவட்ட விவசாய சங்க செயலாளர், கம்பம்): பெரியாறு அணையில் 136 அடி நிலை நிறுத்தப்பட்டதால், தென்தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருந்த இரு போக சாகுபடி, ஒரு போக சாகுபடியாக மாறியுள்ளன. கேரள அரசு புதிய அணை கட்ட நிதி ஒதுக்குவதும், தனி ஆணையம் அமைப்பதும் தமிழக மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
செ.திராவிடமணி (ரத்த பரிசோதனை மைய உரிமையாளர், கூடலூர்): முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு உள்ளன. தமிழகத்தின் அணை உரிமையை நாம் படிப்படியாக பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். கேரள அரசு புதிய அணை கட்டுவதில் உறுதியாக இருக்கும்போது, தமிழக அரசு விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
ப.புதுராஜா (தமிழ்நாடு நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் தலைவர்): தமிழகத்தில் இருந்து தினமும் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கேரளாவிற்கு செல்கிறது. இதை தடுத்து நிறுத்தி, தட்டுப்பாட்டை கேரள அரசு உணரச்செய்ய வேண்டும். தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.முருகன் (டீக்கடை உரிமையாளர், கூடலூர்): கேரள அரசின் நடவடிக்கையால் பெரியாறு அணை நீரை நம்பியுள்ள தமிழக விவசாயிகள் மட்டுமின்றி, குடிநீராக பயன்படுத்தும் பொதுமக்களும் பாதிக்கப்படுவர். புதிய அணை கட்ட கேரள அரசு நிதி ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு போராட்டம் நடத்த வேணடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.