ஆண்டிபட்டி : மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜைகள் துவங்கியது.
காலை 9 மணிக்கு துவங்கிய பூஜையில் மூலவருக்கு பல்வேறு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பரிவார சுவாமிகள் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கேத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை, நடராஜர், பைரவர், நவக்கிரக நாயகர்கள் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மண்டல பூஜை தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் என்று கோயில் குருக்கள் சிவக்குமார் தெரிவித்தார்.