/உள்ளூர் செய்திகள்/தேனி/ஆண்டிபட்டி வைகைரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் எப்போது...ஆண்டிபட்டி வைகைரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் எப்போது...
ஆண்டிபட்டி வைகைரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் எப்போது...
ஆண்டிபட்டி வைகைரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் எப்போது...
ஆண்டிபட்டி வைகைரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் எப்போது...
ADDED : ஜூலை 11, 2011 11:50 PM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி வைகை ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிவடைகிறது.
ஆண்டிபட்டி வைகை ரோடு எம்.ஜி.ஆர்.,சிலையில் இருந்து சக்கம்பட்டி வரையில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. ரோடு பகுதி வரை பல இடங்களில் வீடுகள், கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரோட்டின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்தும்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஆட்டோக்கள், நடமாடும் கடைகளால் பாதசாரிகள் பாதிப்படைகின்றனர். ஆக்கிரமிப்புகளால் ரோடு விரிவாக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது. இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஜூலை 12க்குள் அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து ஆண்டிபட்டி போலீசாரிடம் ஆலோசித்த பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.