/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி சாரண மாணவர்கள்ராஷ்டிரபதி விருது பெற்றனர்புதுச்சேரி சாரண மாணவர்கள்ராஷ்டிரபதி விருது பெற்றனர்
புதுச்சேரி சாரண மாணவர்கள்ராஷ்டிரபதி விருது பெற்றனர்
புதுச்சேரி சாரண மாணவர்கள்ராஷ்டிரபதி விருது பெற்றனர்
புதுச்சேரி சாரண மாணவர்கள்ராஷ்டிரபதி விருது பெற்றனர்
ADDED : செப் 15, 2011 04:06 AM
புதுச்சேரி:பாரத சாரண, சாரணியம் இயக்கம் சார்பில் வழங்கிய 'ராஷ்டிரபதி
விருதை' புதுச்சேரி மாணவர்கள் பெற்றனர்.டில்லி ஜனாதிபதி மாளிகையில் பாரத
சாரண, சாரணியம் இயக்கம் சார்பில் 'ராஷ்டிரபதி விருது' வழங்கும் விழா
நடந்தது.
இவ்விருது சவராயலு நாயகர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி சாரணியர்
பிரிவைச் சேர்ந்த மாணவி பிரேம் கதிரழகி, பேட்ரிக் பள்ளி மாணவர் மனோரஞ்சன்
ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விருதை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வழங்கினார்.
விருது பெற்ற சாரணிய மாணவியை புதுச்சேரி சாரண, சாரணிய அமைப்பின்
பொறுப்பாளர் கிருபாகரன் , சவராயலு நாயகர் அரசு பெண்கள் உயர்நிலைப்
பள்ளியின் சாரண ஆசிரியை பார்வதி ஆகியோர் பாராட்டினர்.


