விலை உயர்வு சரியல்ல: ராமதாஸ் அறிக்கை
விலை உயர்வு சரியல்ல: ராமதாஸ் அறிக்கை
விலை உயர்வு சரியல்ல: ராமதாஸ் அறிக்கை
ADDED : செப் 15, 2011 08:22 PM
சென்னை : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை: கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, இதுவரை பெட்ரோல் விலையை உயர்த்தி வந்த மத்திய அரசு, இப்போது அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து விட்டதை காரணம் காட்டி, விலையை உயர்த்தியிருப்பது சரியல்ல.இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்.
தமிழக முதல்வர், பெட்ரோல் மீதான வரியைக் குறைத்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்க முன் வர வேண்டும், என கூறியுள்ளார்.


