/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அனைவருக்கும் சிறப்பு திட்டங்கள் வழங்கப்படும்: அமைச்சர் பேச்சுஅனைவருக்கும் சிறப்பு திட்டங்கள் வழங்கப்படும்: அமைச்சர் பேச்சு
அனைவருக்கும் சிறப்பு திட்டங்கள் வழங்கப்படும்: அமைச்சர் பேச்சு
அனைவருக்கும் சிறப்பு திட்டங்கள் வழங்கப்படும்: அமைச்சர் பேச்சு
அனைவருக்கும் சிறப்பு திட்டங்கள் வழங்கப்படும்: அமைச்சர் பேச்சு
ADDED : செப் 17, 2011 01:22 AM
அரூர்: ''அரசின் சிறப்பு திட்டங்கள் அனைத்தும் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும்,'' என உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசினார்.
தமிழக அரசின் சிறப்பு திட்டங்களான இலவச மிக்ஸி, கிரைண்டர், பேன், கறவை மாடுகள், ஆடுகள், மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கும் விழா வைரனூர், புட்டிடெர்டிப்பட்டி, சிந்தல்பாடி, கோபிசெட்டிபாளையம் ஆகியர கிராமங்களில் நடந்தது. கலெக்டர் லில்லி தலைமை வகித்தார். சிறப்பு திட்ட பொருட்களை வழங்கி அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த ஏழை மக்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள், ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை மற்றும் லேப்டாப் வழங்கப்படும் என அறிவித்தார். அதே போல் பொறுப்பேற்றவுடன் ரேஷன் கடைகளில் 20 கிலோ இலவச அரிசி வழங்கினார். முதியோருக்கு உதவித்தொகையை உயர்த்தியும், ஏழை மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி தனியாக அமைச்சரை நியமித்து, திட்டம் மற்றும் செயலாக்க துறை என தனித்துறை அமைக்கப்பட்டு ஏழை மக்களுக்கு திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மக்களை சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் அனைத்தும் வரும் ஒன்றரை ஆண்டுகளில் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும். இத்திட்டங்கள் வழங்கிட அதற்கான குழு அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு ஒரு ஆண் மூன்று பெண் ஆடுகள் வழங்கப்படுகிறது. இதற்கு முதல் கட்டமாக 925 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு செட் ஆட்டின் விலை 12 ஆயிரத்து 500 ரூபாயாகும். பெண்களுக்கு வழங்கப்படும் பேன், மிக்ஸி, கிரைண்டர் ஆகியவை மதிப்பு 5 ஆயிரத்து 444 ரூபாயாகும். இதற்கான நிதி ஒதுக்கீடு 912 கோடியாகும். தமிழகத்தில் ஒரு கோடியே 83 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அனைத்து கார்டுக்கும் வழங்கப்படும். தர்மபுரி மாவட்ட மாணவர்களுக்கு தற்போது 55 லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. நம் மாவட்டத்துக்கு 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். டி.ஆர்.ஓ., கணேஷ், ஆர்.டி.ஓ., சுப்புலட்சுமி, தனி துணை ஆட்சியர் (சிறப்பு திட்டம்) பாலசுப்பிரமணி, மண்டல இணை இயக்குனர் (கால்நடை துறை) டாக்டர் ஞானஉபகாரம், முதன்மை கல்வி அலுவலர் இளங்கோ, தாசில்தார் பழனிசாமி, யூனியன் சேர்மன்கள் குமுதாகிருஷ்ணன், பழனியம்மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் ரவிக்குமார், மாணிக்கம், பஞ்சாயத்து தலைவர்கள் வெங்கடாசலம், லட்சுமி தமிழரசன், குபேந்திரன், சிவமணிவேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.