/உள்ளூர் செய்திகள்/தேனி/பட்டுமலை மாதா ஆலயத்தில் எட்டு நாள் நோன்பு நிகழ்ச்சிபட்டுமலை மாதா ஆலயத்தில் எட்டு நாள் நோன்பு நிகழ்ச்சி
பட்டுமலை மாதா ஆலயத்தில் எட்டு நாள் நோன்பு நிகழ்ச்சி
பட்டுமலை மாதா ஆலயத்தில் எட்டு நாள் நோன்பு நிகழ்ச்சி
பட்டுமலை மாதா ஆலயத்தில் எட்டு நாள் நோன்பு நிகழ்ச்சி
ADDED : செப் 21, 2011 11:04 PM
கம்பம் : பாம்பனார் பட்டுமலை மாதா ஆலயத்தில் எட்டுநாள் நோன்பு நிகழ்ச்சிகள் நடந்தது.இடுக்கி மாவட்டம் பாம்பனார் பட்டுமலை மாதா ஆலயம் பிரசித்தி பெற்றதாகும்.
தேயிலை தோட்டங்களுக்கு நடுவில் மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் எட்டுநாள் நோன்பு திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருஉருவ பிரதிஷ்டை பந்தலில் விழா துவங்கியது. முதல் நாள் ஆடம்பரத்திருப்பலி நடந்தது. எட்டு நாட்களும் தினமும் சொற்பொழிவு, தியானம், திருப்பலி நடந்தது.பாம்பனார் இருதய தேவாலயத்திலிருந்து பட்டுமலை ஆலயத்திற்கு தேர்ப்பவனி நடந்தது. பட்டுமலை ஆலய சுப்பீரியர் பாதிரியார் ஹிப்போலிட்டஸ் தடத்தில் இந்த பவனியை நடத்தினார். ராயப்பன்பட்டி தூய பனிமய மாதா ஆலய பாதிரியார் காந்திசவரிமுத்து உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினார்.