ADDED : செப் 19, 2011 01:09 AM
மதுரை வி.எச்.பி., மாவட்ட தலைவர் சின்மயா சோமசுந்தரம் அறிக்கையில் கூறியுள்ளதாவது: பரமக்குடி, மதுரையில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூடு வருத்தம் அளிக்கிறது.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அரசு அறிவித்த உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பொது மக்களுக்கு உயிர்பயம் ஏற்படும் வகையில் கலவரங்களில் ஈடுபடுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், என தெரிவித்துள்ளார்.