ADDED : ஜூலை 27, 2011 10:41 PM
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான மகசேசே விருது, இந்த ஆண்டு, இரண்டு இந்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு, பிலிப்பைன்ஸ் நாட்டின், மறைந்த முன்னாள் அதிபர் மகசேசே பெயரில், விருது வழங்கப்படுகிறது. ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் இந்த விருது, இந்த ஆண்டு, ஆறு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இரண்டு பேர், இந்தியர்கள். மகாராஷ்டிராவைச் சேர்ந்த நீலிமா மிஸ்ரா, கிராம மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வருபவர். இவரது சேவையை பாராட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர் அமெரிக்காவில் படித்த ஹரிஷ் ஹண்டே. ஹரிஷ் ஹண்டே நிறுவனம் தயாரித்துள்ள சூரிய விளக்குகள், ஒரு லட்சத்து, 20 ஆயிரம் பேரின் வீட்டில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, மகசேசே விருது அறக்கட்டளை தலைவர் அபெல்லா தெரிவித்துள்ளார். இந்த விருது, அடுத்த மாதம் 31ல், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடக்கும் விழாவின் போது வழங்கப்பட உள்ளது.