ADDED : ஆக 22, 2011 10:49 PM
புதுச்சேரி : பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளியில், சையன்தாலஜி வாலண்டியர் சார்பில் செயல்வழி கற்றல் குறித்த 3 நாள் கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கிற்கு பள்ளி முதல்வர் ஜான்போஸ்கோ தலைமை தாங்கி, வாழ்த்திப் பேசினார். சையன்தாலஜி தன்னார்வலர் மார்க், பிரிஸ்கா வழிகாட்டுதலில், தன்னார்வலர் ஏலோடி மேற்பார்வையில் நடந்த கருத்தரங்கில் 6ம் வகுப்பை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.சையன்தாலஜி விரிவுரையாளர்கள் ஆண்டனி, சார்லின் மற்றும் குழுவினர் கருத்தரங்கை நடத்தினர்.