/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வி.ஏ.ஓ.,க்களின் ரேஷன் கடை கண்காணிப்பு பணி நிறுத்தம்வி.ஏ.ஓ.,க்களின் ரேஷன் கடை கண்காணிப்பு பணி நிறுத்தம்
வி.ஏ.ஓ.,க்களின் ரேஷன் கடை கண்காணிப்பு பணி நிறுத்தம்
வி.ஏ.ஓ.,க்களின் ரேஷன் கடை கண்காணிப்பு பணி நிறுத்தம்
வி.ஏ.ஓ.,க்களின் ரேஷன் கடை கண்காணிப்பு பணி நிறுத்தம்
ADDED : செப் 23, 2011 11:28 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன்கடைகளை காலையிலும்,
மாலையிலும் கண்காணிக்க வி.ஏ.ஓ.,க்கள் செல்லாததால், கடைகளை இஷ்டத்துக்கு
திறக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் 667 ரேஷன்
கடைகளும், நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 19 கடைகளும், கூட்டுறவு மகளிர்
சங்கம், பனை வெல்லம் சங்கங்கள் மூலம் தலா ஆறு கடைகள் உட்பட மொத்தம் 709
கடைகள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமானதாக
இருக்க வேண்டும் என்று அரசும், மாவட்ட நிர்வாகமும் அதிரடி நடவடிக்கைகளை
ஆரம்பத்தில் எடுத்தது. இதற்காக வழங்கல் பிரிவு அதிகாரிகள், வி.ஏ.ஓ.,க்கள்
மூலம் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது. வி.ஏ.ஓ.,க்கள் காலையில் 9.30
மணிக்கு ரேஷன் கடை திறக்கும்போதும், மாலை கடை அடைக்கும் நேரத்தையும்
காண்காணித்து வழங்கல் பிரிவு அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க
உத்தரவிடப்பட்டது. ரேஷன் கடைகளை திறக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை
எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் வி.ஏ.ஓ.,க்களிடம் முதியோர்
உதவித்தொகை, பட்டா மாறுதல் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. அவர்களால் ரேஷன்
கடைகளை கண்காணிக்க முடியவில்லை. இதனால் கிராமப்பகுதிகளில் உள்ள கடைகள்
காலை 11 மணிக்கு மேலேயே திறக்கப்படுகின்றன. அவ்வாறு திறந்தாலும்
மதியத்துக்கு மேல் பொருட்கள் வழங்குவதில்லை. பொருட்கள் எப்பொழுது
வழங்குகின்றனர் என்றே தெரியாமல் மக்கள் திண்டாடுகின்றனர். ஒரு நாளைக்கு,
ஒரு பொருள் மட்டுமே வழங்குகின்றனர். அன்று அந்த பொருளை வாங்காவிட்டால்,
அடுத்த மாதம்தான் வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே ரேஷன் கடைகளை
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் திறந்திருக்கவும், எப்போதும் எல்லா
பொருட்களையும் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.