எதிரிகளை சில நிமிடங்களில் வீழ்த்தும் ஏவுகணை தயாராகிறது
எதிரிகளை சில நிமிடங்களில் வீழ்த்தும் ஏவுகணை தயாராகிறது
எதிரிகளை சில நிமிடங்களில் வீழ்த்தும் ஏவுகணை தயாராகிறது
ADDED : ஆக 11, 2011 11:35 PM

லண்டன்: : உலகின் எந்த மூலையானாலும், ஏவுகணைகளை விட வேகமாகச் சென்றடையக் கூடிய வானூர்தி தொழில்நுட்பத்தை, அமெரிக்கா தயாரித்திருக்கிறது.
இந்த முன்னணி திறன் கொண்ட வாகனத்திற்கு,'பால்கன் எச்டிவி-2' என பெயரிடப்பட்டிருக்கிறது.அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட, 'பால்கன் எச்டிவி-2' என்ற ஆளில்லாமல் பறக்கக்கூடிய ஏவுகணை போர் விமானம், 21 ஆயிரத்து 580 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடியது. ஆயிரத்து 386 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போர் விமானம், கடந்த ஏப்ரல் மாதம் சோதனை ரீதியாக இயக்கப்பட்டு ÷தால்வியடைந்தது.பொதுவாக, 'சூப்பர் சானிக்' என்பது, ஒலியை விட வேகமாகச் செல்லும் வானூர்தி ஆகும். ஆனால் இது, 'ஹைபர் சானிக்' என்றழைக்கப்படுகிறது. ஒலியை விட ஐந்து மடங்கு வேகம் கொண்டது. பொதுவாக நியூயார்க் முதல், லாஸ் ஏஞ்சல்ஸ் வரை ஜெட் விமானத்தில் பயணம் செய்ய ஆகும் அந்த நேரத்தை, இந்த ஏவுகணை ஊர்தி 12 நிமிடத்தில் கடக்கும் திறன் கொண்டது.அமெரிக்காவின் இந்த, 'ஹைபர் சானிக் தொழில்நுட்பம்' முழு வெற்றி பெற்றால், விண்வெளியில் பயணம் என்பது மேலும் எளிதாகும். அத்துடன் அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பமும் மேலும் வலுப் பெறும். முரண்டு பிடிக்கும் எதிரி நாடுகளை, தன் ஏவுகணைகளால் சில நிமிடங்களில் பணிய வைத்து விடும்.கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படை தளத்திலிருந்து மினோடார் என்ற ராணுவ ராக்கெட் மூலம், 'பால்கன்' விண்ணில் ஏவி பரிசோதிக்கப்படுகிறது. ஒரு டன் எடை கொண்ட அணுகுண்டை ஏந்திச் செல்லும் திறன் வாய்ந்த இச்சோதனை முழு வெற்றி பெற்றால், வரும் 2025ம் ஆண்டு இந்த பால்கன் வாகனம் பயன்பாட்டிற்கு வரும்.