/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பேராசிரியருக்கு நல்லாசிரியர் விருதுபேராசிரியருக்கு நல்லாசிரியர் விருது
பேராசிரியருக்கு நல்லாசிரியர் விருது
பேராசிரியருக்கு நல்லாசிரியர் விருது
பேராசிரியருக்கு நல்லாசிரியர் விருது
ADDED : செப் 15, 2011 04:13 AM
புதுச்சேரி:புதுச்சேரி பல்கலைக்கழகத் தமிழியற்புலப் பேராசிரியர்
திருநாகலிங்கத்திற்கு நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.புதுச்சேரி
பல்கலைக்கழகம், கடந்த ஆண்டு முதல் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களை
ஊக்குவிக்கும் பொருட்டு ஆசிரியர் தினத்தன்று, அவர்களிடம் பயிலும்
மாணவர்களின் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து நல்லாசிரியர்
விருது வழங்கி வருகிறது.இதில் ஆசிரியரின் ஆளுமைத் திறன், நேரம் தவறாமை,
பயிற்றுவிக்கும் முறை, வகுப்பிற்கான தயாரிப்பு, ஆழமான கல்வி அறிவு போன்ற 20
அளவுகோள்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அவ்வாறு இந்த வருடம்,
மாணவர்களின் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் பல்கலைக்கழக தமிழியற்புல
பேராசிரியர் திருநாகலிங்கத்திற்கு நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.


