அமெரிக்க தூதரக அதிகாரிகள் நாளை கோவை வருகை
அமெரிக்க தூதரக அதிகாரிகள் நாளை கோவை வருகை
அமெரிக்க தூதரக அதிகாரிகள் நாளை கோவை வருகை
கோவை : விசா பெற விண்ணப்பிப்போர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்க, அமெரிக்க தூதரக அதிகாரிகள், நாளை கோவை வருகின்றனர்.
நாளை காலை 9 முதல் 11 மணி வரை, பீளமேடு, பி.எஸ்.ஜி., மேலாண்மைக் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் மாணவர் விசா, கல்வி விசா, ஊழியர் விசா, எச்.1.பி., விசா., எல் விசா, பி1/பி2 விசா உள்ளிட்டவை குறித்தும், மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை, அவிநாசி ரோடு, ஜி.ஆர்.டி., கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில், வேற்று நாட்டில் குடிபுகுந்தவருக்கான விசா உட்பட, கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், 'கொடிசியா' வுடன் இணைந்து வர்த்தக விசா பெறும் முறைகள் குறித்தும், தூதரக அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
மதுரை: கோவையைத் தொடர்ந்து, வரும் 29ம் தேதி மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில், காலை 9 முதல் பகல் 12 மணி வரையும், அதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலை 3 மணிக்கு காமராஜர் ரோட்டிலுள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக வளாகத்தில் நடக்கும் வர்த்தக கூட்டத்திலும், தூதரக அதிகாரிகள் பேச உள்ளனர்.


