/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பெண் போலீசிடம் ஆபாச பேச்சு "ஜொள்' ஆசாமிக்கு ஜெயில்பெண் போலீசிடம் ஆபாச பேச்சு "ஜொள்' ஆசாமிக்கு ஜெயில்
பெண் போலீசிடம் ஆபாச பேச்சு "ஜொள்' ஆசாமிக்கு ஜெயில்
பெண் போலீசிடம் ஆபாச பேச்சு "ஜொள்' ஆசாமிக்கு ஜெயில்
பெண் போலீசிடம் ஆபாச பேச்சு "ஜொள்' ஆசாமிக்கு ஜெயில்
ADDED : ஜூலை 14, 2011 02:05 AM
கோவை : கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, பெண் போலீசாரிடம் 'ஜொள்' விட்ட தூத்துக்குடி ஆசாமி நேற்று கைது செய்யப்பட்டான்.
அவசர போலீஸ் உதவி தேவைப்படுவோர், கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையை, '100' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசுவதற்கு, கட்டணம் இல்லை. இந்த சலுகையை, விஷமிகள் சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். கடந்த சில மாதங்களாக, இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம ஆசாமி ஒருவன், கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருக்கும் பெண் போலீசாரிடம், ஆபாசமாகவும், அருவருப்பாகவும் பேசி தொல்லை கொடுத்துள்ளான். நூற்றுக்கும் மேற்பட்ட முறை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளான். இதனால் அவசர உதவிக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பலமுறை எச்சரித்தும், மர்ம ஆசாமியின் அட்டகாசம் தொடர்ந்ததால், பெண் போலீசார், போலீஸ் கமிஷனர் அமரேஷ்புஜாரியிடம் புகார் அளித்தனர். மாநகர குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். துணை கமிஷனர் நிஜாமுதீன் மேற்பார்வையில், தனிப்படை போலீசார் மொபைல்போன் டவர் மூலம் கண்காணித்ததில், பெண் போலீசாரிடம் 'ஜொள்' விட்ட ஆசாமி, தூத்துக்குடி மாவட்டம், மேல்முடிமன் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகை பெருமாள் மகன் ரங்கசாமி (36) என தெரிந்தது. தனிப்படை போலீசார், மேல்முடிமன் கிராமத்துக்கு சென்றநேரத்தில் கூட, கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளான். கைது செய்யப்பட்ட 'வக்கிர புத்தி' ரங்கசாமி கோவை அழைத்து வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான். போலீஸ் கமிஷனர் அமரேஷ்புஜாரி கூறும்போது, ''கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசுவது, மிஸ்டு கால் கொடுப்பது, போன் செய்த பின் பேசாமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எச்சரித்தார்.


