/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவு : காங்., மீது பா.ஜ., பகீர் குற்றச்சாட்டுஉலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவு : காங்., மீது பா.ஜ., பகீர் குற்றச்சாட்டு
உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவு : காங்., மீது பா.ஜ., பகீர் குற்றச்சாட்டு
உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவு : காங்., மீது பா.ஜ., பகீர் குற்றச்சாட்டு
உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவு : காங்., மீது பா.ஜ., பகீர் குற்றச்சாட்டு
ADDED : ஆக 29, 2011 11:20 PM
புதுக்கடை : ஊழல் மலிந்த காங்., அரசினால் உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது என தேங்காப்பட்டணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாநில இளைஞரணி தலைவர் குருமூர்த்தி பேசினார்.
நாட்டில் தற்போது எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்தது. இதனை அடுத்து ஊழலை எதிர்த்து முன்சிறை ஒன்றிய பா.ஜ., இளைஞரணி சார்பில் ஒன்றிய தலைவர் குமார் தலைமையில் கூட்டாலுமூட்டில் இருந்து ஊழல் எதிர்ப்பு பேரணி நடந்தது. பேரணியை பைங்குளம் கிராம பஞ்., தலைவர் சந்திரகுமார் துவக்கி வைத்தார். முன்சிறை ஒன்றிய பா.ஜ., தலைவர் சவுந்தர்ராஜன், பொதுச்செயலாளர் விஜயகுமார், ஒன்றிய இளைஞரணி பொதுச்செயலாளர் ஐயப்பதாஸ், விளாத்துறை கிராம பஞ்., தலைவர் சுரேஷ், புதுக்கடை டவுண் பஞ்., தலைவர் பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின் ஊர்வலமாக தேங்காப்பட்டணம் வந்தனர். தேங்காப்பட்டணத்தில் முன்சிறை ஒன்றிய இளைஞரணி சார்பில் ஊழல் எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய இளைஞரணி தலைவர் குமார் தலைமை வகித்தார். பைங்குளம் நகர இளைஞரணி தலைவர் பிஜூ வரவேற்றார். முன்சிறை பஞ்., யூனியன் தலைவர் பிறேம்குமார், பிரசார அணி தலைவர் முகம்மதுறாபி, மாநில இளைஞரணி துணைத்தலைவர் ராஜேஷ்பாபு பேசினர். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பாலகணபதி பேசியதாவது: ஊழல் எதிர்ப்பு போராட்டம் இன்று நாடு முழுவதும் நடக்கிறது. அதன் ஒரு கட்டமாக தேங்காப்பட்டணத்தில் ஊழல் எதிர்ப்பு பேரணி நடந்தது. உலகில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழியாகும். எனவே தான் பிரான்சில் உள்ள உயர்ந்த கோபுரத்திலும் வருக, வணக்கம் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் சுவிட்சர்லாந்தில் உள்ள பாங்குகளில் இந்தி மொழி எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்கள் பலர் தங்கள் கறுப்பு பணங்களை சுவிஸ் பாங்கில் போடுவதற்கு வசதியாக எழுதப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கச்சத்தீவில் சென்று மீன் பிடிக்கக்கூடாது என கூறுகிறார். கச்சத்தீவில் ஏன் மீன் பிடிக்கக்கூடாது. இவ்வாறு பாலகணபதி பேசினார். மாநில இளைஞரணி தலைவர் குருமூர்த்தி பேசியதாவது: இன்று நாடு முழுவதும் புரட்சி வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்த புரட்சியின் காதாநாயகன் அன்னா ஹசாரே. யார் இந்த அன்னா ஹசாரே. திருமணம் செய்யாமல் சமூகத்திற்காக பாடுபடுகிறார். சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறை படித்து சமூக சிந்தனைக்கு திரும்பியவர். இவரால் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. மகாராஸ்டிராவில் நான்கு ஊழல் அமைச்சர்களை வெளியேற்றியவர். ஜன்லோக்பால் மசோதாவுக்கு பாடுபட்டு 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வெற்றிபெற்றவர். அவருடைய ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு பா.ஜ., வும் ஆதரவு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு உள்ளது. ஸ்பெக்டராம் ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல் போன்ற ஊழலால் பொதுமக்கள் நொந்துள்ளனர். இந்த விரக்தியால் தான் அன்னா ஹசாரேவின் கீழ் மக்கள் கூடியுள்ளனர். பா.ஜ., இளைஞரணி சார்பில் இந்த ஊழலை எதிர்த்து லட்சக்கணக்கான இளைஞர்கள் டெல்லியில் போராடினர்.
அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. அறப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டனத்திற்கு உரியதாகும். விக்கிலீக்ஸ் இணையதளம் கறுப்பு பணம் பதுக்கி வைத்தவர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த பணங்களை வெளிக்கொண்டு வர வேண்டும். வாஜ்பாய் அரசில் பொக்ரைனில் அணுகுண்டு வெடித்ததின் மூலம் உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்திருக்கிறது. ஆனால் ஊழல் மலிந்த காங்., அரசில் உலக அரங்கில் இந்தியா தலை குனிந்துள்ளது. 2012ம் ஆண்டுக்கு பின் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும். இந்தியாவிலும் புரட்சி ஏற்பட்டு காங்., கட்சியை தூக்கி ஏறியும் காலம் வந்துவிட்டது. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த முடியாமல் விழிப்பிதுங்கும் நிலையில் அரசு உள்ளது. இவ்வாறு குருமூர்த்தி பேசினார்.
மாவட்ட பா.ஜ., தலைவர் தர்மராஜ், பா.ஜ., இளைஞரணி தலைவர் சதீஷ்பாரதி, செயலாளர் ராமசந்திரன், பொதுச்செயலாளர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.