UPDATED : ஆக 15, 2011 09:21 AM
ADDED : ஆக 15, 2011 07:27 AM
புதுடில்லி: நாட்டின் 65 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மன்மோகன்சிங் டில்லி செங்கோட்டையில் தேசியகொடியை ஏற்றிவைத்தார்.
முன்னதாக செங்கோட்டைக்கு வந்த பிரதமரை மத்திய ராணுவத்துறை அமைச்சர் ஏ. கே.அந்தோணி மற்றும் இணை அமைச்சர் பல்லம் ராஜூ ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். அதனைதொடர்ந்து அவர் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.