/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மகளிர் சுய உதவிக்குழுவினர் எதிர்ப்பு மணல் அள்ளும் பணி நிறுத்தி வைப்புமகளிர் சுய உதவிக்குழுவினர் எதிர்ப்பு மணல் அள்ளும் பணி நிறுத்தி வைப்பு
மகளிர் சுய உதவிக்குழுவினர் எதிர்ப்பு மணல் அள்ளும் பணி நிறுத்தி வைப்பு
மகளிர் சுய உதவிக்குழுவினர் எதிர்ப்பு மணல் அள்ளும் பணி நிறுத்தி வைப்பு
மகளிர் சுய உதவிக்குழுவினர் எதிர்ப்பு மணல் அள்ளும் பணி நிறுத்தி வைப்பு
ADDED : ஜூலை 27, 2011 11:47 PM
திருக்கனூர் : சங்கராபரணி ஆற்றில் மணல் அள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மணல் அள்ளும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.திருக்கனூர் அடுத்த செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் பாப்ஸ்கோ நிறுவனம் சார்பில் மணல் அள்ள கடந்த ஒரு மாதத்திற்கு முன் அரசு அனுமதி அளித்தது.
நிலத்தடி நீர் மட்டம் குறையும் என்பதால் அப்பகுதி மக்கள் மணல் அள்ள கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்இதனையடுத்து செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் திடலில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டத்தையடுத்து பாப்ஸ்கோ அதிகாரிகள் போலீசார் உதவியுடன் நேற்று முன்தினம் சங்கராபரணி ஆற்றில் மணல் அள்ளச் சென்றனர்.இதனைக் கண்ட மகளிர் சுய உதவிக் குழுவினர் மணல் அள்ளும் செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரையில் திரண்டனர். அங்கிருந்த பாப்ஸ்கோ அதிகாரிகளிடம் ஆற்றில் மணல் அள்ளினால் தண்ணீர் தேங்காது . நிலத்தடி நீர் மட்டம் படுபாதாளத்திற்குச் சென்றுவிடும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.