டில்லி கோர்ட் குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிஜ்புல் முஜாகிதீன்?
டில்லி கோர்ட் குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிஜ்புல் முஜாகிதீன்?
டில்லி கோர்ட் குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிஜ்புல் முஜாகிதீன்?
ADDED : செப் 29, 2011 07:29 PM
ஜம்மு/ புதுடில்லி : டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையை துவக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக, சிறையில் உள்ள அந்த அமைப்பைச் சேர்ந்தவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.