ADDED : செப் 17, 2011 07:31 AM
ஐதராபாத் : வேலை இல்லையேல், சம்பளம் இல்லை என்ற முறையில், வேலைக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ஆந்திர அரசு மறுத்துள்ளது.
அரசு ஊழியர்களின் வருகை பதிவேடு மாதந்தோறும் 18ம் தேதி முடிக்கப்படும். எஸ்மா சட்டத்தின் படி, முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட தடை உள்ளது. அவ்வாறு உள்ள நிலையில், தெலுங்கானா பிரச்னையில் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் வாட்ச்மேன் உள்பட அனைவரின் சம்பளத்தையும், அதிகாரிகள் பிடித்தம் செய்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி, நோ ஒர்க்.. நோ பே.. முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.