Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஓய்வூதியர்கள் நலவாரியம் அமைக்க பென்ஷனர்கள் சங்கம் வலியுறுத்தல்

ஓய்வூதியர்கள் நலவாரியம் அமைக்க பென்ஷனர்கள் சங்கம் வலியுறுத்தல்

ஓய்வூதியர்கள் நலவாரியம் அமைக்க பென்ஷனர்கள் சங்கம் வலியுறுத்தல்

ஓய்வூதியர்கள் நலவாரியம் அமைக்க பென்ஷனர்கள் சங்கம் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 28, 2011 01:52 AM


Google News

திருநெல்வேலி : பாளை.

யில் பென்ஷனர்கள் சங்க பொதுக்குழுக்கூட்டத்தில் ஓய்வூதியர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பாளை. யில் மாவட்ட அரசு பென்ஷனர்கள் சங்க 54வது ஆண்டு நிறைவு விழா, பொதுக்குழுக்கூட்டம் தலைவர் முத்துசுவாமி தலைமையில் நடந்தது. உறுப்பினர் ரத்தினம் அம்மாள் இறைவணக்கம் பாடினார். துணைத்தலைவர் பெருமாள் வரவேற்றார். துணைத்தலைவர் வெங்கடாசலம் இரங்கல் தீர்மானம் வாசித்தார். செயலாளர் நட்டார், பொருளாளர் ஜெகநாதன் அறிக்கை வாசித்தனர்.நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஓய்வு பெற்ற போலீஸ் அலுவலர்கள் நலச்சங்கத்தலைவர் ராஜகோபால், ஓய்வு பெற்ற துணை கலெக்டர் சிவகாமிநாதன், ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பேசினர்.மாவட்ட கருவூல அலுவலர் அர்ஜூனன், பாளை.



சார்நிலைக்கருவூலர் கிறிஸ்டி ஆகியோர் பென்ஷனர்கள் குறைகளை பரிசீலித்து உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர். தேர்தல் அதிகாரி தியாகராஜன் நிர்வாகிகள் தேர்தலை நடத்தினார். தலைவராக முத்துசுவாமி, துணைத்தலைவர்களாக பெருமாள், அப்பணசாமி, செயலாளராக சண்முகம், இணைச்செயலாளராக சங்கரபாண்டியன், பொருளாளராக ஜெகநாதன், 15 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.மூத்த குடிமக்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை ஆயிரம் ரூபாயாக உயர்த்திய முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிப்பது, முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் அளிப்பது, முதியோர்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண அனுமதிச்சீட்டு வழங்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவது, ஓய்வூதியர்கள் நலவாரியம் அமைத்து குறைகளை தீர்ப்பது, மாவட்டத்தில் முதியோர் இல்லம் அமைப்பது, சிறப்புக்குழு அமைத்து தகுதியுள்ள முதியோர்களுக்கு உதவித்தொகை அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us