ADDED : ஜூலை 25, 2011 09:46 AM
கொழும்பு: இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர் கட்சி வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் தங்களுடன் பேச வேண்டும் என்பதை அப்பகுதி மக்கள் வெளிப்படுத்தியிருப்பதாக, முன்னாள் எம்.பி., சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமுள்ள 20 இடங்களில் 18 இடங்களை தமிழர் தேசிய கூட்டமைப்பு வென்றுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் எம்.பி., சிவாஜிலிங்கம், கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே இந்த வெற்றி கிடைத்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழ் தலைவர்கள் கடுமையாக மிரட்டப்பட்டதாகவும், அவர்களது பேரணியின் போது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும் மக்களின் இந்த ஆதரவு காரணமாக 18 இடங்களில் தமிழர் தேசிய இயக்கம் வெற்றி பெற்றிருப்பது, தங்களிடம் இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் பேச வேண்டும் என்பதை தமிழ் மக்கள் வெளிப்படுத்தியிருப்பதை காட்டுவதாகவும் தெரிவித்தார்.