Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/"கிராம செயல்திட்டங்கள் மூலம் விவசாயி வருவாயை பெருக்கலாம்': மாநில கமிஷனர்

"கிராம செயல்திட்டங்கள் மூலம் விவசாயி வருவாயை பெருக்கலாம்': மாநில கமிஷனர்

"கிராம செயல்திட்டங்கள் மூலம் விவசாயி வருவாயை பெருக்கலாம்': மாநில கமிஷனர்

"கிராம செயல்திட்டங்கள் மூலம் விவசாயி வருவாயை பெருக்கலாம்': மாநில கமிஷனர்

ADDED : ஜூலை 29, 2011 01:37 AM


Google News

மதுரை : ''கிராம செயல்திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கலாம்,'' என அதிகாரிகளுக்கு விவசாயத்துறை கமிஷனர் சந்தீப்சக்சேனா அறிவுரை வழங்கினார்.

நேற்று மதுரை வந்த அவர், கூடுதல் இயக்குனர் கோபாலகிருஷ்ணனுடன், மேலூர் வினாயகபுரம் நீர்மேலாண்மை பயிற்சி நிலையம், அரசு விதைப் பண்ணையை ஆய்வு செய்தார். பின் கிழக்கு யூனியன் கொடிக்குளம் சென்ற அவர்கள், அங்கு 40 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்துள்ள திருந்திய நெல் சாகுபடி தொகுப்பை பார்வையிட்டனர். விவசாயிகள் தேவன், கணேஷ் ஆகியோரிடம் நெல்சாகுபடி குறித்து கேட்டறிந்தனர்.



விவசாயிகள் கூறுகையிதல், முன்பு நடவுப் பணிக்கு 30 பேர் தேவை. தற்போது ஆட்கள் இல்லாத நிலையில், நடவு இயந்திரம் உதவியாக உள்ளது. தொழில்நுட்பங்களை விவசாய அதிகாரிகள் தாமதமின்றி தருகின்றனர். இதனால் ஏக்கருக்கு 5 முதல் 8 மூடைகள் கூடுதலாக கிடைக்கிறது,' என்றனர். பின்னர் விவசாய கல்லூரியில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு முதல்வர் வைரவன் தலைமை வகித்தார். இணைஇயக்குனர் சங்கரலிங்கம், துணைஇயக்குனர் சம்பத்குமார், உதவி இயக்குனர் கனகராஜ் பங்கேற்றனர். கமிஷனர் பேசுகையில், ''ஒவ்வொரு கிராமம், ஒவ்வொரு விவசாயி என்ற அளவில் செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.



கிராமங்களில் ஒரே நிலம், மண்வளம், தண்ணீர் என இருந்தாலும், விவசாய மகசூல் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. இதற்கான காரணத்தை கண்டறிந்து அதை களைய முயற்சிக்க வேண்டும். விவசாயிகளுக்கு போட்டோவுடன் கூடிய, ஒருங்கிணைந்த கையேடு வழங்கப்பட உள்ளது. அதில் அடுத்த மண்வளம், அடுத்த 3 ஆண்டுக்கு அவர் பயிரிட வேண்டிய விபரம், இடுபொருள் விபரம் இடம்பெறும். அதேபோல வங்கிகளில் பெறும் உதவி, அரசு மானியம் அதில் இடம்பெறும். ஒவ்வொரு விவசாயியையும் இவ்வாறு கண்காணிப்பது மூலம் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கலாம்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us