இது பெண்களுக்கான பரிசு; 25 லட்சம் புதிய இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு
இது பெண்களுக்கான பரிசு; 25 லட்சம் புதிய இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு
இது பெண்களுக்கான பரிசு; 25 லட்சம் புதிய இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு
ADDED : செப் 22, 2025 04:53 PM

புதுடில்லி: உஜ்வாலா திட்டத்தின் கீழ், 25 லட்சம் புதிய இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்து உள்ளார். அவர், 'இது பெண்களுக்கான பரிசு. பெண்களை துர்க்கை போன்று பிரதமர் மதிப்பதற்கு சான்று', என்றார்.
இது குறித்து ஹர்தீப் சிங் புரி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: நவராத்திரி விழாவை முன்னிட்டு மத்திய அரசு பெண்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்படும். இத்துடன் மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை 10.60 கோடியாக உயரும். இது பெண்களுக்கான பரிசு. பெண்களை துர்க்கை போன்று பிரதமர் மதிப்பதற்கு இது சான்று.
காஸ் சிலிண்டர், அடுப்பு
மத்திய அரசு ஒவ்வொரு இணைப்புக்கும் ரூ.2,050 செலவிடும். இதன் மூலம் பயனாளிகள் இலவச காஸ் சிலிண்டர், அடுப்பு வழங்குவது உறுதி செய்யப்படும்.இந்தியாவில் மிகவும் பயனுள்ள சமூக நலத் திட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள உஜ்வாலா யோஜனா, பெண்களின் கண்ணியம் மற்றும் அதிகாரமளிப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பிரகாசம்
உஜ்வாலா யோஜனா சமையலறையை மட்டுமல்ல, முழு குடும்பத்தின், தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் எதிர்காலத்தையும் பிரகாசமாக்கியுள்ளது. இது வெறும் ஒரு திட்டம் மட்டுமல்ல, நாட்டின் ஒரு பெரிய புரட்சியின் மாறியுள்ளது. தற்போது, ரூ.300 மானியத்துடன், 10.33 கோடிக்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள் ரூ.553க்கு வழங்கப்படுகிறது.இந்த விலை உலகளவில் எல்ஜிபி உற்பத்தி செய்யும் நாடுகளை விடக் குறைவு.
புன்னகை
கண்களில் இனி எரிதல் இல்லை, மகிழ்ச்சியின் புன்னகை இருக்கிறது. இனி புகை இல்லை,ஆரோக்கியத்தின் பிரகாசம் இருக்கிறது. தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு இந்த சிறந்த பரிசை வழங்கிய பிரதமருக்கு நன்றி. இவ்வாறு ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.