மூலிகை கும்பலை பிடிக்க கண்காணிப்பு
மூலிகை கும்பலை பிடிக்க கண்காணிப்பு
மூலிகை கும்பலை பிடிக்க கண்காணிப்பு
ADDED : செப் 21, 2011 11:28 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதிகளிலிருந்து விலையுர்ந்த மூலிகை பொருட்களை கடத்தும் கும்பலை பிடிக்க, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் விலையுர்ந்த மரங்கள், அரியவகை மூலிகை மருந்து செடிகள், மருந்துக்களுக்கு தேவையான மரப்பட்டைகள், குச்சிகள், வேர்கள் ஏராளமாக உள்ளன.
மலை வாழ் மக்களின் ஏழ்மையை தங்களுக்கு சாதமாக்கி கொள்ளும் விருதுநகர் ,கோவில்பட்டி பகுதி மருந்து வியாபாரிகள், அவர்கள் உதவியுடன் விலையுர்ந்த மரப்பட்டைகள், வேர்கள், மூலிகைகளை கடத்துகின்றனர். கடந்த சில மாதங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் மான், முயல் வேட்டையாடுபவர்களை வனத்துறையினர் பிடித்து வந்தனர். இந்நிலையில், கடந்த இருநாட்களுக்கு முன் கடல் ஆஞ்சி எனும் மூலிகை வேரை மூடைகளில் கடத்தியவரை கைது செய்தனர். இதையடுத்து வனத்துறையினர் வேர்,மரப்பட்டைகளை கடத்துபவர்களை பிடிக்க, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.