/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தினமும் இருமுறை குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன் வி.கே.புரம் தேமுதிக.,வேட்பாளர் வாக்குறுதிதினமும் இருமுறை குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன் வி.கே.புரம் தேமுதிக.,வேட்பாளர் வாக்குறுதி
தினமும் இருமுறை குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன் வி.கே.புரம் தேமுதிக.,வேட்பாளர் வாக்குறுதி
தினமும் இருமுறை குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன் வி.கே.புரம் தேமுதிக.,வேட்பாளர் வாக்குறுதி
தினமும் இருமுறை குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன் வி.கே.புரம் தேமுதிக.,வேட்பாளர் வாக்குறுதி
ADDED : அக் 08, 2011 01:13 AM
விக்கிரமசிங்கபுரம் : 'விக்கிரமசிங்கபுரத்தில் தினமும் இருமுறை குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என தேமுதிக வேட்பாளர் கூறினார்.விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் தேர்தலில் மா.கம்யூ., கட்சி ஆதரவுடன் தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் முத்துமாரி வெற்றி பெற்றால் நகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கூறியதாவது:விக்கிரமசிங்கபுரம் நகரில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் குடிதண்ணீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு பொது மருத்துவனையாக மாற்றி அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்க முயற்சி செய்வேன்.அரசு வழங்கும் முதியோர் பென்சன், திருமண உதவித் தொகை மற்றும் இலவச திட்டங்கள் பெற்றுத்தர நகராட்சி மூலம் தனி சேவை மையம் அமைக்கப்படும். அகஸ்தியர் அருவியில் உடைமாற்றும் அறை, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படும். நகராட்சியின் சார்பில் திருமண மண்டபம் கட்டி குறைந்த வாடகையில் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். நகரில் பூங்கா அமைக்கப்படும். நகரில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்கள், கோயில்களுக்கு இலவச குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.கீழக்கொட்டாரம் ஆற்றில் பெண்களுக்கென தனிப்படித்துறை கட்டிக் கொடுக்கப்படும். நகரில் பழுதடைந்த சாலைகள் புதுப்பிக்கப்படும். மேலக்கொட்டாரத்திலுள்ள பொது கழிப்பிடம் சீரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வழி செய்யப்படும்.இவ்வாறு தேமுதிக வேட்பாளர் முத்துமாரி கூறினார்.


