/உள்ளூர் செய்திகள்/மதுரை/நாய்கள் கருத்தடைக்கு செலவான ரூ.42 லட்சம் வீண் : 5 ஆண்டுகளில் 17 ஆயிரம் நாய்களுக்கு சிகிச்சைநாய்கள் கருத்தடைக்கு செலவான ரூ.42 லட்சம் வீண் : 5 ஆண்டுகளில் 17 ஆயிரம் நாய்களுக்கு சிகிச்சை
நாய்கள் கருத்தடைக்கு செலவான ரூ.42 லட்சம் வீண் : 5 ஆண்டுகளில் 17 ஆயிரம் நாய்களுக்கு சிகிச்சை
நாய்கள் கருத்தடைக்கு செலவான ரூ.42 லட்சம் வீண் : 5 ஆண்டுகளில் 17 ஆயிரம் நாய்களுக்கு சிகிச்சை
நாய்கள் கருத்தடைக்கு செலவான ரூ.42 லட்சம் வீண் : 5 ஆண்டுகளில் 17 ஆயிரம் நாய்களுக்கு சிகிச்சை
ADDED : செப் 01, 2011 11:43 PM
மதுரை : மதுரை மாநகராட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ.42 லட்சம் செலவிடப்பட்டது.
இருப்பினும் நாய்கள் பெருக்கம் கட்டுப்படவில்லை. தெருக்களில் நாய்கள் தொல்லை நீடிக்கிறது. மாநகராட்சியில் போதிய நிதியின்றி, முக்கிய திட்டங்கள் முடங்கியுள்ளன. அதே நேரத்தில், பொது நிதி பல வழிகளில் வீணடிக்கப்படுகிறது. மாநகராட்சியில் வெறிநாய்கள் தொந்தரவு பிரதானமாக உள்ளது. இதற்கு முற்றிலும் தீர்வு கிடைக்கவில்லை. இருப்பினும் நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ.42 லட்சத்து 28 ஆயிரத்து 321 செலவு செய்யப்பட்டது. 2006 முதல் 2010 வரை கருத்தடை மையத்திற்கு மருந்து வாங்க ரூ.மூன்று லட்சம், கருத்தடை செய்த நாய்களுக்கு தடுப்பு மருந்து வாங்க ரூ.நான்கு லட்சத்து 12 ஆயிரத்து 571 தனியாக செலவிடப்பட்டது. விலங்குகள் நலவாரியத்தில் 50 சதவீதம் மானியமாக, 2006 முதல் 2010 வரை ரூ.28 லட்சத்து 20 ஆயிரத்து 765 பெறப்பட்டது. இந்நிலையில் 2010-11ம் ஆண்டுக்கு 6,367 நாய்களுக்கு கருத்தடை செய்ததாக கணக்கு காட்டப்பட்டது. இதற்காக விலங்குகள் நலவாரியத்தில் ரூ.ஒன்பது லட்சத்து 6,910 மானியம் பெறப்பட்டது. இந்தாண்டு எட்டு மாதங்கள் முடிந்த நிலையில், சட்டசபை தேர்தல் விதிமுறையில் நான்கு மாதங்கள் கழிந்து விட்டன. மீதமுள்ள நான்கு மாதங்களில் ஆறாயிரம் நாய்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நான்கு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், பிடிப்பட்ட நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனாலும் தெருக்களில் நாய்கள் தொந்தரவு முற்றிலும் ஒழிக்கப்படவில்லை. மதுரையில் பல பகுதிகளில் வெறி நாய்கள் சுற்றி
திரிகின்றன.