Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சின்னாத்தா பள்ளியில் நாணயக் கண்காட்சி

சின்னாத்தா பள்ளியில் நாணயக் கண்காட்சி

சின்னாத்தா பள்ளியில் நாணயக் கண்காட்சி

சின்னாத்தா பள்ளியில் நாணயக் கண்காட்சி

ADDED : ஜூலை 15, 2011 01:10 AM


Google News

புதுச்சேரி : முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாணயக் கண்காட்சி நடந்தது.

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த கண்காட்சியை பள்ளி முதல்வர் பாஸ்கர் துவக்கி வைத்தார்.

திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கண்காட்சியில், பல்வேறு காலங்களில் அரசு வெளியிட்ட சிறப்பு நாணயங்கள், தலைவர்களின் உருவம் பொறித்த நாணயங்கள், பல்வேறு மதிப்பிலான பழங்கால செப்பு, அலுமினியம் போன்ற உலோகத்தாலான நாணயங்கள், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற அயல் நாட்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் இடம் பெற்றிருந்தன.

தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us