Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

PUBLISHED ON : ஆக 29, 2011 12:00 AM


Google News

மழைக்கால சாலைகள்



பருவ மழைக் காலத்தில், அடித்து மழை பெய்தால் அடுத்த நிமிடமே பள்ளங்கள் நிறைந்த சாலைகளாக, இந்தியாவின் நகரங்களின் சாலைகள் உள்ளன.சாலைகளின் பராமரிப்பிற்கென, சாலை பயன்பாட்டு வரி பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் குறைந்த அளவு வசூலிக்கப் படுகிறது.

உலகிலேயே சாலை பயன்பாட்டு வரி அதிகம் வசூலிக்கும் நாடு ஸ்பெயினாகும். ஆனால் உலகிலேயே அமெரிக்காவை விடவும், ஜப்பானில் தான் சாலைகள் மிகத் துல்லியமாகப் பராமரிக்கப்படுகின்றன. எத்தகைய இயற்கைச் சீற்றம் ஏற்பட்டாலும், அங்கு உடனுக்குடனேயே சாலைகள் செப்பனிடப்படுகின்றன.உள்கட்டமைப்பில் முக்கியமானவை சாலைகள். அவற்றின் தரத்தைப் பொறுத்தே, நாட்டின் வளர்ச்சி இருக்கும் என ஜப்பான் நம்புகிறது. சாலை விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்யும் அறுவை சிகிச்சை, ஜப்பானில் மிகக் குறைவாகவே நடைபெறுகிறது.



தகவல் சுரங்கம்



கோவாவின் கலாசாரம்



மற்ற மாநிலங்களை விட, கோவாவில் மதுபான வகைகள் 60 சதவீதம் விலை குறைவாக கிடைக்கும்.கோவாவில் இரவில் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே 24 மணிநேரமும் மதுபான விற்பனை இருக்கும். சொல்லப்போனால் கோவாவின் விடியல் மாலை 7 மணிக்கு தான் துவங்கும் என்பர். ஏனெனில் இரவில் தான் கோவா களைகட்டும். இரவில் தான் டிராபிக் ஜாம் அதிகமாக இருக்கும்.கோவாவில் டீக்கடைகளை விட, ரெஸ்டாரன்ட் பார்கள் தான் அதிகமாக இருக்கும். எத்தனை மதுபான வகைகள் கிடைத்தாலும், கோவாவின் கலாசார பானமான பென்னிக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. கோவாவில் அதிகமாக விளையும் முந்திரி, தேங்காயில் இருந்து பென்னி தயாரிக்கப்படுகிறது. மதுபானமாக இருந்தாலும், பென்னியில் ஆல்கஹாலோ, செயற்கை ரசாயனப் பொருட்களோ துளியளவும் இல்லை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us