/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாவூர்சத்திரம் அருகே பாரில் மது விற்றவர் கைதுபாவூர்சத்திரம் அருகே பாரில் மது விற்றவர் கைது
பாவூர்சத்திரம் அருகே பாரில் மது விற்றவர் கைது
பாவூர்சத்திரம் அருகே பாரில் மது விற்றவர் கைது
பாவூர்சத்திரம் அருகே பாரில் மது விற்றவர் கைது
ADDED : ஆக 05, 2011 04:28 AM
பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் பாரில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்த பார் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள மகிழ்வண்ணநாதபுரம் டாஸ்மாக் அருகேயுள்ள பாரில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஜமால், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் 'பார்'க்கு விரைந்து சென்று சோதனையிட்டபோது பாருக்கு பின்புறம் பிராந்தி பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து பார் உரிமையாளர் சாலைப்புதூரை சேர்ந்த லோகநாதன் (51) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 31 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.