Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/கிராமங்கள் முன்னேற ஜாதி, மத பாகுபாடு அகல வேண்டும் :உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சு

கிராமங்கள் முன்னேற ஜாதி, மத பாகுபாடு அகல வேண்டும் :உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சு

கிராமங்கள் முன்னேற ஜாதி, மத பாகுபாடு அகல வேண்டும் :உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சு

கிராமங்கள் முன்னேற ஜாதி, மத பாகுபாடு அகல வேண்டும் :உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சு

ADDED : செப் 04, 2011 12:20 AM


Google News

புதுக்கோட்டை: ''கிராமப் பகுதிகள் முன்னேற வேண்டும் என்றால் ஜாதி, மத, அரசியல் பாகுபாடுகள் அகலவேண்டும்,'' என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பஞ்சாயத்து யூனியனுகுட்பட்ட பெருங்குடி கிராமத்தில் சமுதாயக்கூடம் திறப்பு விழா நடந்தது. பஞ்சாயத்து தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். சமுதாயக் கூடத்தை திறந்துவைத்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது: பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று எம்.பி., நிதியிலிருந்து எட்டு லட்சம், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆறு லட்சம் என 14 லட்ச ரூபாய் செலவில் இந்த சமுதாயக்கூடம் மிக பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதைவிட பெரிய சமுதாயக் கூடத்தை நான் பார்த்ததில்லை.



தமிழகத்திலேயே பெருங்குடி சமுதாயக்கூடம் தான் பெரிதாக இருக்கும் என நினைக்கிறேன். பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்த அனைத்துதரப்பு மக்களும் இந்த சமுதாயக் கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது. பொதுவாக இதுபோன்ற திட்டங்கள் மூலம் கிராமப் பகுதிகள் முன்னேற வேண்டும் என்றால் ஜாதி, மத, அரசியல் பாகுபாடுகள் அகலவேண்டும். இதற்கு பெருங்குடி சமுதாயக்கூடம் முன்னுதாரணமாக அமையவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சுந்தரம், சுப்புராம், நகர்மன்ற கவுன்சிலர் இப்ராஹீம் பாபு உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர். அறந்தாங்கி அடுத்த வல்லவாரி கிராமத்தில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய சமுதாயக் கூடத்தையும் மத்திய அமைச்சர் சிதம்பரம் நேற்று திறந்துவைத்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us