/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தலைவர் பதவியை குறி வைக்கும் கட்சியினர்தலைவர் பதவியை குறி வைக்கும் கட்சியினர்
தலைவர் பதவியை குறி வைக்கும் கட்சியினர்
தலைவர் பதவியை குறி வைக்கும் கட்சியினர்
தலைவர் பதவியை குறி வைக்கும் கட்சியினர்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பதவியை குறி வைத்து அனைத்து அரசியல் கட்சியினரும் சீட் பெறும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர்.
தற்போது, நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தலைவர் பதவிக்கு பொதுமக்கள் நேரடியாக ஓட்டு போட்டு தேர்வு செய்யும் முறை மீண்டும் வந்துள்ளது. இந்த தேர்தலிலும் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், தி.மு.க.,வை சேர்ந்த நிர்வாகிகளும் தங்களது மனைவியை தேர்தல் களத்தில் இறக்க முடிவு செய்து கட்சி தலைமையிடம் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர்.
நகராட்சி தலைவர் பதவி நேரடியாக தேர்வு செய்யப்படவுள்ளதால் சுயேச்சைகள் பலரும் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளனர். இருப்பினும் இந்த தேர்தலில் போட்டியிட முக்கிய கட்சிகளான அ.தி.மு.க., - தி.மு.க., - காங்கிரஸ், - பா.ம.க., ஆகிய கட்சியினர் சீட் வாங்க கடும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.


