ஹசாரே உண்ணாவிரதத்துக்கு 3நாள் மட்டும் அனுமதி
ஹசாரே உண்ணாவிரதத்துக்கு 3நாள் மட்டும் அனுமதி
ஹசாரே உண்ணாவிரதத்துக்கு 3நாள் மட்டும் அனுமதி
UPDATED : ஆக 13, 2011 02:09 PM
ADDED : ஆக 13, 2011 12:09 PM
புதுடில்லி: வலுவான லோக்பால் மசோதா அமைக்க வலியுறுத்தி டில்லியில் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கும் அன்னா ஹசாரேக்கு, 3நாள் மட்டும் டில்லி போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மூலம் நாடுமுழுவதும் எழுந்த எழுச்சியால், லோக்பால் வரைவு மசோதாவை மத்திய அரசு கொண்டு வர முன்வந்தது. இது தொடர்பான மசோதாவும் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசோதாவில் பிரதமர், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டவரது பெயரை சேர்க்காததால் இந்த மசோதா, வலுவிழந்த மசோதா என்று அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதனை எதிர்த்து வருகிற ஆகஸ்ட் 16ம் தேதி முதல் டில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி டில்லி போலீசாரிடம் முறையீட்டு இருந்தார். ஆனால் டில்லி போலீசோ, மூன்று நாள் மட்டுமே அனுமதி கொடுத்துள்ளனர். இதனால் ஹசாரே தரப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.