Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/"பாசி' அலுவலகத்தில் சி.பி.ஐ., குழு சோதனை

"பாசி' அலுவலகத்தில் சி.பி.ஐ., குழு சோதனை

"பாசி' அலுவலகத்தில் சி.பி.ஐ., குழு சோதனை

"பாசி' அலுவலகத்தில் சி.பி.ஐ., குழு சோதனை

ADDED : ஆக 20, 2011 11:48 PM


Google News
திருப்பூர்:திருப்பூர் 'பாசி' நிறுவன அலுவலகத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர்.திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிறுவனம், தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் டிபாசிட் தொகை பெற்று, 1,600 கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்களிடம் மோசடி செய்தது. சி.பி.ஐ., வசம் விசாரணை ஒப்படைக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இயக்குனர்கள் மோகன்ராஜ், கமலவள்ளி, கதிரவன் ஆகியோரை, அசாம் மாநிலம் கவுகாத்தியில் கைது செய்தனர். சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரிடமும், ஏழு நாட்கள் விசாரணை நடத்த நீதிபதி அனுமதியளித்தார்.கடந்த 13, 17, 18ம் தேதிகளில், மோகன்ராஜை, அவரது வீட்டுக்கு அழைத்து வந்து, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வீட்டிலிருந்த பல்வேறு ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஆகியவற்றை கைப்பற்றினர். நேற்று முன்தினம் கஸ்டடி விசாரணை முடிந்த நிலையில், மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளியிடம், மீண்டும் ஐந்து நாட்கள் விசாரணை நடத்த, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு கோர்ட் அனுமதியளித்தது.

மற்றொரு இயக்குனர் கதிரவன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.சி.பி.ஐ., அதிகாரிகள், மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளியை அழைத்து வந்து, பாசி நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்தினர். காலையில் துவங்கிய சோதனை, இரவு வரை நீடித்தது. 25க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் பதிவாகியிருந்த தகவல்களை சேகரித்தனர். நிதி நிறுவனம் துவங்கியது முதல் பெறப்பட்ட முதலீடுகள், நிறுவன செயல்பாடுகள், வங்கிக் கணக்குகள், மோசடி செய்த தொகை, எவ்வகையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது உட்பட பல்வேறு தகவல்களை சேகரித்ததோடு, தொடர் விசாரணை நடத்தினர். அதிகளவு ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் இருப்பதால், இன்னும் சில நாட்கள் விசாரணை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காத்திருக்குது அதிர்ச்சி: பணம் பல மடங்காகும் என்ற ஆசையில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில், முறைகேடாக சொத்து சேர்ந்த அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், கறுப்பு பணத்தை முதலீடு செய்த தொழிலதிபர்கள் பலர், புகார் கொடுக்க முடியாத நிலையில், கொடுத்தால், முதலீடு தொகை வந்த வழி

குறித்து கணக்கு சொல்ல வேண்டுமே என்ற அச்சத்தில், பல கோடி ரூபாயை இழந்தும் அமைதியாக உள்ளனர். நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள், பாசி நிறுவனம் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட அதன் துணை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் குறித்த விபரங்களை சேகரித்துள்ளனர். இதில், இத்தகையோரின் விபரம் தெரியவரும் என்பதால், கறுப்பு பணத்தை முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us