ADDED : செப் 04, 2011 01:19 AM
மதுரை : மதுரையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது.
மாநில அமைப்பாளர் முருகானந்தம் துவக்கி வைத்தார். நகர் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். சுவாமி கமலாத்மானந்தா முன்னிலை வகித்தார். மதுரை நகர் பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட 94 சிலைகள் மொட்டைவிநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின், விளக்குத்தூண், மாசிவீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டு, வைகை ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டன. ஊர்வலம் சென்ற பகுதிகள் அனைத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன.