/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஊட்டியில் ஓட்டல்களில் "ஓண சத்யா' :பல்வகை உணவை ரசித்து ருசிக்கும் மக்கள்ஊட்டியில் ஓட்டல்களில் "ஓண சத்யா' :பல்வகை உணவை ரசித்து ருசிக்கும் மக்கள்
ஊட்டியில் ஓட்டல்களில் "ஓண சத்யா' :பல்வகை உணவை ரசித்து ருசிக்கும் மக்கள்
ஊட்டியில் ஓட்டல்களில் "ஓண சத்யா' :பல்வகை உணவை ரசித்து ருசிக்கும் மக்கள்
ஊட்டியில் ஓட்டல்களில் "ஓண சத்யா' :பல்வகை உணவை ரசித்து ருசிக்கும் மக்கள்
ADDED : செப் 08, 2011 11:18 PM
ஊட்டி : ஓணம் பண்டிகையை குதூகலப்படுத்த, ஊட்டியில் உள்ள பல ஓட்டல்களில்,
'ஓண சத்யா' எனப்படும் விருந்து நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் ஜரூராக நடந்து
வருகிறது.
கேரள மாநில மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம், கேரளா மக்களாலும்,
தமிழகத்தின் பல பகுதிகளில் வசிக்கும் மலையாள இன மக்களாலும், விமரிசையாக
கொண்டாடப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு, கோவை, நீலகிரி உட்பட சில
மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,
நீலகிரியில் உள்ள பெரும்பாலான சுற்றுலா ஸ்தலங்களில் சுற்றுலா பயணிகளின்
கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊட்டி நகரின் முக்கிய
கோவில்களிலும், ஓட்டல்களிலும் மலையாள மக்களின் கூட்டம் அதிகரிக்கும்
என்பதால், அவர்களை மகிழ்விக்கும் வகையில், பல ஓட்டல்களில் 'ஓண சத்யா'
எனப்படும் விருந்தோம்பல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரள
முறைப்படி 10க்கும் மேற்பட்ட பொறியல், அவியல் வகைகளுடன், கைக்குத்தல் அரிசி
சாதம், பால், பயிர் பாயாசம், நேந்திர சிப்ஸ், நேந்திர பழத்தால்
உருவாக்கப்பட்ட இனிப்பு வகைகள் உணவில் இடம் பெறுகின்றன. இதற்கென சிறப்பு
கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.