/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி அருகே அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தைதூத்துக்குடி அருகே அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தை
தூத்துக்குடி அருகே அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தை
தூத்துக்குடி அருகே அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தை
தூத்துக்குடி அருகே அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தை
UPDATED : ஆக 30, 2011 03:50 AM
ADDED : ஆக 29, 2011 11:22 PM
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பராமரிகப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பாலம் அருகே நேற்று முன்தினம் பச்சிளம் குழந்தை அழும் குரல் கேட்டது. இதனை அங்கு ஆடு மேய்க்க சென்ற சிலர் பார்த்து புதுக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மகளிர் போலீசார் அங்கு சென்றனர். அப்போது பிறந்து ஒருநாள் ஆன தொப்புள் கொடி அறுபடாத பெண் குழந்தை ஒன்று வெள்ளை கலர் துணியால் சுற்றப்பட்டு கிடப்பதை அறிந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆஸ்பத்திரி தனிவார்டில் டாக்டர்கள் குழுவினர் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அனாதையாக வீசப்பட்ட குழந்தை யாருக்கு சொந்தமானது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.