/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/உள்ளாட்சி தேர்தலிலும் தமிழக மக்கள் தி.மு.க.வை புறக்கணிப்பது உறுதி : அமைச்சர் நம்பிக்கைஉள்ளாட்சி தேர்தலிலும் தமிழக மக்கள் தி.மு.க.வை புறக்கணிப்பது உறுதி : அமைச்சர் நம்பிக்கை
உள்ளாட்சி தேர்தலிலும் தமிழக மக்கள் தி.மு.க.வை புறக்கணிப்பது உறுதி : அமைச்சர் நம்பிக்கை
உள்ளாட்சி தேர்தலிலும் தமிழக மக்கள் தி.மு.க.வை புறக்கணிப்பது உறுதி : அமைச்சர் நம்பிக்கை
உள்ளாட்சி தேர்தலிலும் தமிழக மக்கள் தி.மு.க.வை புறக்கணிப்பது உறுதி : அமைச்சர் நம்பிக்கை
ADDED : செப் 16, 2011 01:50 AM
கடையநல்லூர் : 'தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள திமுகவை தமிழக மக்கள் உள்ளாட்சி தேர்தலிலும் புறக்கணிக்க போவது உறுதி' என அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
கடையநல்லூரில் நேற்று அவர் கூறியதாவது:- தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்று அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றுமே சிறப்பு பெற்றவையாக அமைந்துள்ளன. அதனை நிறைவேற்றுவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டு வருகிறார். மத்திய அரசின் மூலமாக போதுமான நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெறாத நிலையிலும் தமிழக மக்கள் நலன் கருதி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்களை திமுக சந்தித்து ஓட்டு கேட்பதற்கே அச்சப்படும் நிலைதான் காணப்படுகிறது. திமுக முன்னாள் அமைச்சர்கள் முதல், திமுக மாவட்ட நிர்வாகிகள் வரை அனைவருமே நில அபகரிப்பு, நில மோசடி வழக்குகளில் கைது செய்யப்படும் நிலைதான் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு கடந்த திமுக ஆட்சியில் நில மோசடிகளில் திமுகவினர் ஈடுபட்டுள்ளதை தமிழக மக்கள் தற்போது வெட்ட வெளிச்சமாக பார்க்கும் நிலை காணப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் காணப்பட்ட மின்தடை முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக மின்தடை தற்போது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள் தடையின்றி இயங்கும் சூழ்நிலை ஏற்பட்டதுடன் தொழிலாளர்களின் நலனும் பாதுகாக்கப்பட்டுள்ளது. மின்தடையால் இருளில் மூழ்கிய தமிழகத்தை பதவியேற்ற மூன்றே மாதங்களில் ஒளிவீசும் தமிழகமாக மாற்றியமைத்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு தமிழக மக்கள் எதிர்கட்சி அந்தஸ்தை கூட கிடைக்கப்பெற முடியாத நிலைக்கு தகுந்த பாடத்தினை புகட்டினர். அதேபோன்று உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவிற்கு அளிக்க கூடிய பாடம் தொடரும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. தனித்து போட்டியிடுவதாக திமுக அறிவித்துள்ள போதிலும் தமிழக மக்கள் திமுகவை இனி ஒருபோதும் நம்ப தயாராக இல்லை. உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவை புறக்கணிக்கப் போவது உறுதி. தமிழகத்தில் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிகழ்ச்சியை நேற்று முதல்வர் துவக்கி வைத்தார். தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட இந்த வாக்குறுதி பயனாளிகள் கையில் கிடைத்திருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாகும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். அமைச்சருடன் வி.பி.மூர்த்தி, இலஞ்சி சண்முகசுந்தரம், தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், செங்கோட்டை குருசாமி, கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, நகர செயலாளர் கிட்டுராஜா, ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, வடகரை ரஜப் உடனிருந்தனர்.


