போலீசார் மீது புகார் தெரிவிக்க ஸ்டேஷன்களில் புகார் பெட்டி:விருதுநகர் எஸ்.பி., நடவடிக்கை
போலீசார் மீது புகார் தெரிவிக்க ஸ்டேஷன்களில் புகார் பெட்டி:விருதுநகர் எஸ்.பி., நடவடிக்கை
போலீசார் மீது புகார் தெரிவிக்க ஸ்டேஷன்களில் புகார் பெட்டி:விருதுநகர் எஸ்.பி., நடவடிக்கை
ADDED : ஜூலை 20, 2011 05:41 AM
விருதுநகர்:போலீசார் மீதான புகார்களை பொது மக்கள் தெரிவிக்க வசதியாக ,விருதுநகர் மாவட்ட ஸ்டேஷன்களில் புகார் பெட்டி வைக்க , நஜ்மல் கோதா எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.போலீஸ் ஸ்டேஷன்களில் பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுத்தும் ,சில போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடிப்பது உண்டு.
இதனால் ஏற்படும் கட்டப்பஞ்சாயத்து, சமாதனம் போன்றவற்றை தடுப்பதற்காகவும், போலீசார் சிலர் மது அருந்தியப்படி போதையில் வேலை செய்வதை கண்டறியவும், தீவிரவாதிகள் நடமாட்டம், நாச வேலைகள் குறித்து நேரடியாக கூற முடியாதவர்கள் புகார் கூற வசதியாக ,ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் புகார்பெட்டி வைக்க, விருதுநகர் நஜ்மல் கோதா எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,'' இதன் புகார் பெட்டியை, எஸ்.பி., போலீசாரே தினமும் திறந்து, மனுக்களை எடுத்து என்னிடம் கொடுப்பர். அதன்படி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 54 ஸ்டேஷன்களிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட உள்ளன.