Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/அதி நவீன புரை அறுவை சிகிச்சை கருவி: ஆர்த்தி கண் மருத்துவமனையில் அறிமுகம்

அதி நவீன புரை அறுவை சிகிச்சை கருவி: ஆர்த்தி கண் மருத்துவமனையில் அறிமுகம்

அதி நவீன புரை அறுவை சிகிச்சை கருவி: ஆர்த்தி கண் மருத்துவமனையில் அறிமுகம்

அதி நவீன புரை அறுவை சிகிச்சை கருவி: ஆர்த்தி கண் மருத்துவமனையில் அறிமுகம்

ADDED : செப் 13, 2011 12:58 AM


Google News
கரூர்: கரூரில் ஆர்த்தி கண் மருத்துவமனையில் அதி நவீன புரை அறுவை சிகிச்சை கருவி துவக்க விழா நடந்தது.

இவ்விழாவுக்கு கரூர் அமராவதி மருத்துவமனை டாக்டர் வேலுசாமி தலைமை வகித்தார். ஆர்த்தி கண் மருத்துவமனை டாக்டர் மகேஸ்வரி வரவேற்றார். எமரிடஸ் சேர்மன் பத்மஸ்ரீ டாக்டர் நம்பெருமாள்சாமி மருத்துவமனையை திறந்து வைத்தார். ஆல்கான் இன்ஃபினிடி ஓஸி ல் நவீன புரை அறுவை சிகிச்சைக் கருவியை எமரிடஸ் டைர க்டர் டாக்டர் நாச்சியார் திறந்து வைத்தார். நெல்லை ஆல் இந்தியா ரேடியோ மகாசோமாஸ் கந்தமூர்த்தி வாழ்த்தி பேசினார். ஆர்த்தி கண் மருத்துவமனை டாக்டர் ரமேஷ் தெரிவித்ததாவது: உலகின் தலைசிறந்த கண் மருத்துவமனைகளில் அதிகம் பயன்பாட்டில் உள்ள அதிநவீன கண் புரை அறுவை சிகிச்சைக்க ருவியின் (அஃஇON ஐNஊஐNஐகூஐ ஙிஐகூஏ Oஙூஐஃ) சேவையும் துவங்கப்பட உள்ளது. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இக்கருவி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன்மதிப்பு 36 லட்சம் ரூபாயாகும். இக்கருவி மிக சிக்கலான புரையைக்கூட எளிதாக அகற்றக்கூடிய தொழில்நுட்பம் கொண்டது. மிக மிகச் சிறிய துவாரம் வழியாக கண்புரையை குழம்பாக்கி உறிஞ்சி விடும் சக்தி கொண்டது. இக்கருவியை பயன்படுத்துவதன் மூலம் அதிவிரைவில் மி கத்தெளிவான பார்வை கிடைக்கும். மிக நவீன அகுகஏஉகீஐஇ, கூOகீஐஇ, Mக்ஃகூஐஊஇஅஃபோன்ற மடங்கி விரியும் லென்சுகள் பொருத்தப்படும் போது, நோயாளிக்கு மிகச்சிறந்த பார்வை கிடைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். விழாவில், கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி செயலாளர் ராமகிருஷ்ணன், வள்ளுவர் கல்லூரி தாளாளர் செங்குட்டுவன், நண்பன் அச்சகம் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us