/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யணும் :சங்கக் கூட்டத்தில் தீர்மானம்பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யணும் :சங்கக் கூட்டத்தில் தீர்மானம்
பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யணும் :சங்கக் கூட்டத்தில் தீர்மானம்
பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யணும் :சங்கக் கூட்டத்தில் தீர்மானம்
பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யணும் :சங்கக் கூட்டத்தில் தீர்மானம்
ADDED : செப் 13, 2011 02:00 AM
நாமக்கல் : 'நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ரிங் ரோடு அமைக்க வேண்டும்.
எதிர்கால போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க, பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம செய்ய வேண்டும்' என, சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க மகாசபைக் கூட்டம், பொம்மைக்குட்டை மேடு திருமண மண்டபத்தில் நடந்தது. மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி தலைமை வகித்துப் பேசினார். செயலாளர் சுப்ரமணி, பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: நாமக்கல் நகரில் பெருகி வரும் மக்கள் தொகை அடிப்படையிலும், நகருக்குள் வந்து செல்லும் வாகனங்களின் அதிகமான எணணிக்கையாலும், நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகரின் எதிர்கால போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, சேலம் சாலையில் இருந்து சேந்தமங்கலம் சாலை, துறையூர் சாலை, திருச்சி சாலை, மோகனூர் சாலைகளை இணைத்து, பரமத்தி சாலையில் சேரும் வகையில் 'ரிங் ரோடு' அமைக்க வேண்டும். நாமக்கல்லில், தற்போது உள்ள பஸ் ஸ்டாண்ட் இடநெருக்கடி காரணமாகவும், வந்து செல்லும் பயணிகளுக்கு சுகாதார வசதி போதுமானதாக இல்லாமலும் உள்ளது. நகரின் எதிர்கால போக்குவரத்து சிரமங்களை தவிர்க்கவும், மக்களின் வசதியை மனதில் கொண்டு, பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த, 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி, அடிக்கல் நாட்டப்பட்ட சேலம்-கரூர் அகல ரயில்பாதை திட்டம் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. திட்டத்தை விரைவுபடுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரி தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல், கீரம்பூரில் அமைந்துள்ள சங்கச்சாவடியில், நாமக்கல் பகுதி வாகனங்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல்-பரமத்தி சாலையில் அமைக்கப்பட்ட ஆட்டோ நகரில், வசதிகளையும், மின்சார வசதிகளையும் விரைவாக ஏற்படுத்தி, அனைத்து பணிமனைகளும் ஆட்டோ நகரில் அமைக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரத்திற்கு உட்பட்ட சாலைகளை அகலப்படுத்த, மாவட்ட நிர்வாகம், நகராட்சியும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க உப தலைவர் சேகர், துணைச் செயலாளர் சீரங்கன், மாநில லாரி உரிமையாளர் சம்மேளன நிர்வாகிகள், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகம், சதர் ரீஜன் பல்க் எல்.பி.ஜி., டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள், ஆட்டோ நகர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.