/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வளவனூர் பேரூராட்சி தேர்தலில் சேர்மன் வேட்பாளர்கள் மனு தாக்கல்வளவனூர் பேரூராட்சி தேர்தலில் சேர்மன் வேட்பாளர்கள் மனு தாக்கல்
வளவனூர் பேரூராட்சி தேர்தலில் சேர்மன் வேட்பாளர்கள் மனு தாக்கல்
வளவனூர் பேரூராட்சி தேர்தலில் சேர்மன் வேட்பாளர்கள் மனு தாக்கல்
வளவனூர் பேரூராட்சி தேர்தலில் சேர்மன் வேட்பாளர்கள் மனு தாக்கல்
ADDED : செப் 27, 2011 11:33 PM
விழுப்புரம் : வளவனூர் பேரூராட்சியில் அ.தி.மு.க.,- தி.மு.க.,- பா.ம.க., சார்பில் சேர்மன் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று சுறுசுறுப்பாக மனு தாக்கல் செய்தனர்.
சேர்மன் பதவிக்கு சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் மனு தாக்கல் செய்தார்.விழுப்புரம் பேரூராட்சி சேர்மன் பதவிக்கு அ.தி. மு.க., சார்பில் முன்னாள் சேர்மன் முருகவேல், தி.மு.க., சார்பில் ஜீவா, தே.மு.தி.க., சார்பில் பார்த்திபன், பா.ம.க., சார்பில் வேலாயுதம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.நேற்று அமாவாசை தினத்தன்று அ.தி.மு.க., - தி.மு.க.,- பா.ம.க., சார்பில் சேர்மன் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். முதலில் பா.ம.க., சேர்மன் வேட்பாளர் வேலாயுதம் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துவேலிடம் மனு தாக்கல் செய்தார்.காலை 11 மணிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் முருகவேல் தொண்டர்களுடன் கட்சி தேர்தல் அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துவேலிடம் காலை 11.30 மணிக்கு மனு தாக்கல் செய்தார்.அமைச்சர் சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன், நெமிலி சங்கர், ராஜ்குமார் ரெட்டியார், நகர செயலாளர் காசிநாதன் உடனிருந்தனர். அ.தி.மு.க., சார்பில் 15 வார்டுகளின் கவுன்சிலர் வேட்பாளர்களும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரந்தாமன், ராஜேந்திரனிடம் மனு தாக்கல் செய்தனர்.
பின்னர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள அண்ணாதுரை சிலைக்கு முருகவேல் மற்றும் நிர்வாகிகள் மாலையணிவித்தனர். வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், நகர அவைத் தலைவர் நாராயணன், முன்னாள் நகர செயலாளர் அண்ணாமலை, எம்.ஜி.ஆர்., மன்றம் காசிநாதன், வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் தி.மு.க., சார்பில் சேர்மன் பதவிக்கு போட்டியிடும் ஜீவா தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பிற்பகல் 12.15 மணிக்கு மனு தாக்கல் செய்தார். சேர்மன் சம்பத், நகர செயலாளர் வைத்திலிங்கம், முன்னாள் சேர்மன் விஸ்வக்சேன நாயுடு, துணைத் தலைவர் சரபோஜி உடனிருந்தனர். பின்னர் 15 வார்டுகளுக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.பின்னர் பேரூராட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக சென்ற தி.மு.க., சேர்மன் வேட்பாளர் ஜீவா பொது மக்களிடம் ஓட்டு சேகரித்து சென்றார். நிர்வாகிகள் ஜெயபால், தண்டபாணி, ராஜா, வழக்கறிஞர் சுரேஷ், ராஜன், ஜெயபால், ரகுமான், பழனி கலந்து கொண்டனர்.பேரூராட்சியில் அ.தி. மு.க.,- தி.மு.க., வினரிடையே கடும் போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் சேர்மன் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட குமார குப்பம் பகுதியை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் நேற்று மதியம் 2.30 மணிக்கு மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று அ.தி.மு.க., - தி.மு.க., சார்பில் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் உட்பட 43 பேர் மனு தாக்கல் செய்தனர்.


