லாரி- காய்கறி வேன் மோதல்: 2 பேர் காயம்
லாரி- காய்கறி வேன் மோதல்: 2 பேர் காயம்
லாரி- காய்கறி வேன் மோதல்: 2 பேர் காயம்
UPDATED : ஜூலை 14, 2011 07:34 AM
ADDED : ஜூலை 14, 2011 05:24 AM
நெல்லை: மரம் ஏற்றி வந்த லாரியுடன், காய்கறி வேன் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட இருவர் காயமடைந்தனர்.
கேரளாவுக்கு மரகட்டை ஏற்றிச் சென்ற லாரி நெல்லை-நாகர் கோயில் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தளபதி சமுத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது டயர் பஞ்சரானதால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது நின்று கொண்டிருந்த மரம் ஏற்றிவந்த லாரி மீது காய்கறி ஏற்றி வந்த வேன் மோதிய விபத்தில் தக்கலையைச் சேர்ந்த டிரைவர் ரமேஷ்( 42) , அவருடன் வந்த கிருஷ்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இது குறித்து நெல்லை போலீசார் விசாரித்து வருகின்றனர்.